News Just In

9/01/2024 05:42:00 AM

யாழில் இடம்பெற்ற சஜித்தின் பிரசார கூட்டம்: விரக்தியில் திரும்பி சென்ற மக்கள்!



யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஒரு மணிநேரத்திற்கு மேல் தாமதமாக சென்றமையால் மக்கள் சிலர் திரும்பி சென்றுள்ளனர்.

குறித்த தேர்தல் பிரசார கூட்டமானது இன்றையதினம் (31.08.2024) பிற்பகல் 3.30 மணியளவில் நடத்தும் வகையில் யாழ்ப்பாணம் - துணவி விளையாட்டு மைதானம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, மக்கள் கூட்டத்திற்கு வருகை தந்திருந்ததுடன், பேருந்து மூலமும் மக்கள் அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித், கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தினை தாண்டி ஒரு மணிநேரம் கடந்த பின்னரும் வருகை தரவில்லை.

இதன் காரணமாக, மக்கள் களைப்படைந்து விரக்தியில் இருந்ததுடன் சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாது திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

No comments: