(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்டத்தில் பரவலாக சிறுபோக வேளாண்மை அறுவடை முடிந்ததுடன் காட்டு யானைகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விஷனம் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லிமுல்லை- மல்கம்பிட்டி வீதியில் செவ்வாய் (20) அதிகாலையில் பயணித்த ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர் தியேட்டர் வீதியைச் சேர்ந்த முஹம்மட் ஜிப்ரி என்பவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவராவார்.
இது விடயமாக நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: