News Just In

8/10/2024 04:57:00 PM

நிந்தவூரில் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இருவர் காயம்!

நிந்தவூர், அட்டப்பள்ளத்தில்இடம்பெற்ற விபத்து :இருவர் காயம்



(அஸ்ஹர் இப்றாஹிம்)
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளத்திற்கு அண்மையில் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது.

நெல் அறுவடை பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி சாலையை மறித்து திரும்ப முற்பட்ட வேளை மறுமுனையில் இருந்து வேகமாக பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பாக நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகநிந்தவூரில் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இருவர் காயம் தெரிவிக்கப்படுகின்றது.

.


No comments: