News Just In

8/20/2024 07:35:00 PM

காரைதீவில் தமிழ்மொழிமூல சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பதவி அணியினருக்கு சிறுவர் நலன் மற்றும் முதலிதவி தொடர்பான பயிற்சி பட்டறை


(அஸ்ஹர் இப்றாஹிம்)

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில் உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.பாத்திபன் தலைமையில் தமிழ் மொழி மூல சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பதவி அணியினருக்கான சிறுவர்நலன் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சி பட்டறை செவ்வாய்க்கிழமை (20) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது

இன் நிகழ்வில் வளவாளராக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை உளநல வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.சறாப்தீன் மற்றும் திருக்கோயில் குமார வித்தியாலய அதிபர் எஸ்..தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments: