நான் ரணில் ராஜபக்ச அல்ல: ஜனாதிபதி

வ டக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (18.07.2023) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இதற்கு முன்னர் விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தான் ரணில் விக்கிரமசிங்க என்றும், ரணில் ராஜபக்ச அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே தாம் விரும்புகின்றேன், அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது தனது நோக்கமல்ல.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு தாம் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை. அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் நாடாளுமன்றத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரங்கள் தவிர பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும்.

No comments: