
இலங்கையில் வாகன இறக்குமதி மீதான தடை இதுவரையில் நீக்கப்படாத நிலையில் இது தொடர்பான புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
ஜப்பானிய வாகனங்களின் இறக்குமதி
அதன்படி மிக விரைவில் மீண்டும் இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களின் இறக்குமதி தொடங்கப்படலாமென ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளால் இந்த நாட்டிலுள்ள வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் இது தொடர்பாக ஏற்கனவே சாதகமான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கத்தினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களின் பிரகாரம் இந்த வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.என்ற போதும், இலங்கையில் உள்ள வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் உரிய பதில் கிடைக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: