News Just In

11/20/2022 07:50:00 PM

மட்டக்களப்பை தளமாகக்கொண்ட ஒரு வங்கி உருவாக்கப்படவேண்டும்: மட்டக்களப்பு மாநகர முதல்வர்! (காணொளி)

HECS எனப்படும் உயர் கல்விக்கான ஆலோசனை வழிகாட்டல் சேவையை வழங்கும் நிறுவனத்தின் வழிகாட்டலுக்கு அமைய கனடிய பாடசாலையில் அனுமதி பெற்று விசா கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து பேசுகையின்போது மட்டக்களப்பை தளமாகக்கொண்ட ஒரு வங்கி உருவாக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் குறிப்பிட்டார்.

HECS (Pvt) Ltd நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் திரு. எஸ். தேவசிங்கன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க (EDS) சிவநேசராசா மண்டபத்தில் இன்று (20.11.2022) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வருடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் மற்றும் கல்வி கலை கலாச்சார சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் திரு.ந.ஹரிதாஸ் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் பிரதேச பிரமுகர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் EDS மாணவர்களால் ஆங்கில நாடகமொன்று மேடையேற்றப்பட்டது. இதனை HECS இன் ஆங்கில வளவளரான திரு.V.கமலதாஸ் அவர்கள் நெறிப்படுத்தியதோடு பலராலும் இந்நாடகம் பாராட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஐந்து மாணவர்களுடன் நான்கு பெற்றோர்களுக்குமான விசா அனுமதி கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.



No comments: