News Just In

4/08/2022 06:04:00 PM

ஜனாதிபதிக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி


கொழும்பில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடந்துள்ளது. ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் எமக்கு வேண்டும் கோட்டா எனவும் போரை வென்ற கோட்டா எனவும் நாட்டை முன்னேற்ற போகும் கோட்டா போன்ற கோஷ்ங்களை எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகிச் செல்லுமாறு கோரி, மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள், சமையல் எரிவாயு, பால் மா தட்டுப்பாடுகள், மின்சார துண்டிப்பு போன்ற காரணங்களினால் மக்கள் ஆத்திரமடைந்து அரசாங்கத்திற்கு எதிராக சுயமாக வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இதன் காரணமாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு ஆதவாக போராட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான நிலையிலேயே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் இடங்களுக்கு சென்று அரசாங்கத்திற்கு ஆதவானவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டால், அது மோதல் நிலைமையாக மாறாலாம் என அவதானிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் நீர்த்து போய்விடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: