News Just In

10/25/2020 08:05:00 AM

நேற்று மாத்திரம் 368 பேருக்கு கொரோனா தொற்று, ஒருவர் பலி- மொத்த எண்ணிக்கை 7521ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் புதிதாக 368பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7521 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3714 ஆக காணப்படுகின்றது.

மேலும், 3792 பேர், நாட்டிலுள்ள 27 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி 15 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: