கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்டமாக 23 மாவட்டங்களை சேர்ந்த 300இற்கு அதிகமானோர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டிகளில் பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு அனுப்பப்படுவோரில் கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாகவும், அவர்களுக்கான வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: