News Just In

4/12/2020 02:00:00 PM

பொறுகாமம் கிராமத்திற்கு விவேகானந்தா தொழிநுட்ப கல்லூரியால் நிவாரணம் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பின்தங்கிய கிராமமான பொறுகாமத்தில் வறுமைக்கோட்டின் கீழ்
வாழும் நூறு குடும்பங்களிற்கு விவேகானந்தா தொழிநுட்ப கல்லூரியின் சமூகநலப்பிரிவினால் உலர் உணவுகள அடங்கிய நிவாரணம் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் கலந்துகொண்டார்.

உலக வல்லரசுகளை விழிபிதுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு வளர்முக நாடான இலங்கையும் விதிவிலக்கல்ல. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

இதனால் அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியதை தொடர்ந்து அரசு, அரச சார்பற்ற, தனியார்களினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியின் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பில் இயங்கிவரும் விவேகானந்த தொழிநுட்ப கல்லூரியினால் குறித்த கிராமத்திற்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இக்கிராம மக்கள் அடிப்படை வசதிகளன்றி, கால்நடை வளர்ப்பாளர்களாகவும், விவசாயிகளாகவும், தினக்கூலி உழைப்பாளிகளாகவுமே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவேகானந்தா தொழிநுட்ப கல்லூரியினால் 400 மேற்பட்ட குடும்பங்களிற்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

No comments: